‘‘இன்றுவரை செல்போன் காமிராவிலேயே புகைப்படம் எடுக்கிறேன். டி.எஸ்.எல்.ஆர். காமிராவை எடுத்துச் செல்லும் வேளைகளில் ஆச்ச ர்யங்கள் நிகழ்வதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் ஆச்சர்யம் நிகழும் வேளைகளில் செல்போன் காமிரா நம் கையிலிருக்கும் பொக்கிஷம். என்னுடைய புகைப்படங்கள் இலக்கணப்படி இருக்கிறதா என எனக்குத் தெரியாது. எனக்கு தோன்றியதை எடுக்கிறேன். நாம் வியந்து பார்க்கும் விஷயங்களை அற்பமானதாகவும், அற்ப விஷயங்களை ஆச்சர்ய மானதாகவும் படம்பிடிக்கிறேன். எதை படம் பிடிக்கிறேன் என்பதைவிட எந்த கோணத்தில் படம்பிடிக்கிறேன் என்பதே எனக்கு முக்கியம். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை விட அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதிலேயே அதன் சுகதுக்கம் அமைகிறது. அப்படியே என் புகைப்படங்களும்'' என்று தன் படங்களைப் பற்றி சொல்கிற செல்வராஜ் சீனிவாசன், திண்டிவனத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்.
ஏப்ரல், 2020.